பாக்கு மட்டையில் டீ கப், பார்சல் பாக்ஸ் – தமிழக அரசு ஊக்குவிக்க கோரிக்கை

0
604
tea cup parcel box tamil nadu government encourage

தஞ்சாவூரில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் பாக்கு மட்டையில் டீ கப், பார்சல் பாக்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் கப்-களை தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.tea cup parcel box tamil nadu government encourage

தமிழகம் முழுவதும் அடுத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், பிளாஸ்டிக் கப், பார்சல் பாக்ஸ், ஐஸ்கிரீம் கப்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.

அதன்படி தஞ்சாவூரைச் சேர்ந்த காலித் அகமத், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டைகள் மூலம் பல வகையான கப்களை தயாரித்து வருகிறார்.

பாக்கு மட்டையிலான டீ கப் ஒன்று 75 பைசாவுக்கும், பார்சல் பாக்ஸ் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருவதாகக் கூறிய அவர், இதை வாங்கிப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் நேராது என்று தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :