“கூட்டாட்சி பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை” : எம்.ஏ.சுமந்திரன்

0
437
Sumanthiran Joint Government Statement

தமிழ் மக்களுக்கு கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் என நேற்று வெளியான செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார் Sumanthiran Joint Government Statement

“கூட்டாட்சி என்ற பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வே தேவை ” என்றுதான் நான் குறிப்பிட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்புத் தொடர்பான விழிப்புணர்வூட்டும் தொடர் கலந்துரையாடல் தென்னிலங்கலையில் நடத்தப்பட்டு வருகின்றது. காலியில் சில தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடல் நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது, தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் புதிய அரசமைப்பால் தீரப்போவதில்லை. புதிய அரசமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது. சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளைச் சிங்களப் பெரும்பான்மையினர் ஒத்துக்கொள்வதுடன் ஏனைய மக்களுக்காக மறுசீரமைப்பு மற்றும் நீதிக்காக முன்வரவேண்டும் – என்றார்.

நிகழ்வில் உரையாற்றி முடித்த பின்னர், கூட்டாட்சி தீர்வு மாத்திரம்தான் வேண்டுமா? என்று தன்னிடம் கேள்வி எழுப்பபட்டதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கு, கூட்டாட்சி என்ற பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வே தேவை என்று பதிலளித்தாகத் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை