Categories: Head LineNEWS

விக்கினேஸ்வரனே இனவாதம் கக்குபவர் தமிழ் மக்கள் இல்லை! ராஜித சேனா­ரட்ன கடுப்பு!

முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் முன்­னெ­டுக்­க ப்­பட்­ட­மைக்­கு­ரிய சாட்­சி­யங்­கள் இருந்­தால் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அர­சு­டன் பேச்சு நடத்­த­வேண்­டும். அதை விடுத்து இன­வா­தம் கக்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார். North Chief Minister Vigneswaran Statement Tamil News

அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று இடம்­பெற்ற, அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார்.

அவர் தெரி­வித்­த­தா­வது- “வடக்கு மாகாண சபை­யின் ஊடாக முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தனது மக்­க­ளுக்கு எத­னை­யும் செய்­ய­வில்லை. தற்­போது வடக்­கில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் நடக்­க­வில்லை. எமது அரசு அவ்­வாறு எது­வும் செய்­ய­வில்லை. இந்த நிலை­யில் அவர் இன­வா­தத்தை கையில் எடுத்­துள்­ளார்.

வடக்கு மக்­கள் உண­வுக்­காக அல்­லா­டு­கின்­ற­னர். ஆனால் முத­ல­மைச்­சர் விக்­னேஸ் வ­ரன் இரா­ணுவ நினை­வுத் தூபியை அகற்­று­வது தொடர்­பில் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார். அங்­குள்ள மக்­கள் அது தொடர்­பில் பேச­வில்லை. விக்­னேஸ்­வ­ர­னுக்கு தற்­போது தேவைப்­ப­டு­வது இன­வா­தம் மாத்­தி­ரம்­தான்.

வடக்­கில் காணி­கள் முழு­மை­யாக விடு­விக் கப்­ப­ட­வில்லை. இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வில்லை. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பிரச்­சினை, அர­சி­யல் கைதி­கள் பிரச்­சினை என்று அந்த மக்­க­ளுக்கு பல பிரச்­சி­னை­கள் உள்­ளன.

கொழும்பு அரசு வடக்கு மாகாண சபைக்கு வழங்­கு­கின்ற நிதி முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. செயற்­றி­றன் அற்ற மாகாண சபை­யின் செயற்­பாட்டை மூடி மறைக்க இன­வாத ஆயு­தத்தை வடக்கு முத­ல­மைச்­சர் கையில் எடுக்­கின்­றார். மக்­கள் ஆத­ரவை இழப்­ப­தால், அவர் இன­வா­தத்தை எடுக்­கின்­றார் – என்­றார்.

அமைச்­ச­ர­வை­யின் மற்­றொரு இணைப் பேச்­சா­ளர் கயந்த கரு­ணா­தி­ல­க­வும் கருத்­துத் தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

வடக்கு, கிழக்­கில் பௌத்த சின்­னங்­கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­ப­டு­வ­தில் உண்­மை­யில்லை. தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­னர் அதனை உரிய முறை­யில் பேணிப் பாது­காக்­கின்­ற­னர். வடக்கு மக்­க­ளுக்கு இரா­ணுவ நினை­வுத் தூபி தற்­போது பிரச்­சி­னை­யல்ல. அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் வேறு. வடக்கு மக்­கள் இரா­ணு­வத்­தின் சேவை­கள் தொடர்­பி­லேயே நல்­ல­வி­த­மா­கப் பேசு­கின்­ற­னர்“ என்­றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: North Chief Minister Vigneswaran Statement Tamil News

Recent Posts

டுபாக்கூர் விருது ஐஸ்வர்யாக்கு தானாம்… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வரட்டும் விரட்டி அடிப்பேன் என கூறும் பிரபல நடிகை…!

பிக் பாஸ் இறுதிப்போட்டி நடக்க இருக்கும் சந்தர்ப்பத்தில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் தமிழ் பெண்களுக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ஆர்த்தி. Vote tamil girls- Actress…

30 mins ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

48 mins ago

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!

பிரபல பாலிவுட் நடிகை பூணம் பாண்டே, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக உடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக இருக்கப்போவதாக அடிக்கடி டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். Actress Poonam…

58 mins ago

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது… கை விரித்தது சிபிஐ… – தமிழக அரசு அதிர்ச்சி!

தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சிபிஐ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.statue inquire spreading cpi - tamilnadu government shocked…

2 hours ago

மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்! – லெனின்பாரதி பேச்சு!

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதியுடன் சந்திப்பு – கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி தமிழ் பண்பாட்டு மையம் மற்றும் பதியம் திரைப்பட இயக்கம் சார்பில்…

2 hours ago

பிரித்தானியா கால்வாயில் கண்டெடுத்த ஆயுதக் குவியல்

பிரித்தானியா கால்வாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. Arms heap found British canal ஷெல்டன்ஹாம் என்ற இடத்தில் உள்ள கால்வாயில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தினருடன்…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.