புலிகளின் ஆயுதம் முஸ்லிம்களிடமா?: உடன் விசாரணைக் குழு அமைக்க கோரிக்கை

0
443
Muslim politicians given LTTE weapons inquiry

தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுச்சென்ற ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மையைக் கண்டறிய, உயர் மட்ட குழுவொன்றை நியமிக்குமாறு பொது நிர்வாக மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.(Muslim politicians given LTTE weapons inquiry)

அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கே. இன்பராசா என்பவர் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.இதனையடுத்து அரசியல் கட்சிகள் சில நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களிலும் இந்த விடயம் அடிக்கடி நினைவுபடுத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என். எம். அமீன் எழுதியுள்ள விசேட கடிதத்திலேயே இந்த கோரிக்கை குறித்த அமைச்சரிடம் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது என கண்டறியப்படும் பட்சத்தில், குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கே. இன்பராசா மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வெறுப்பு பேச்சை பரப்புவதற்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, கடந்த 30 வருடகால யுத்தத்தின் போது முஸ்லிம் சமூகம் தேசப்பற்றுடன் இருந்ததுடன் எந்தவித ஆயுத கிளர்ச்சியிலோ வன்முறையிலோ ஈடுபடவில்லை. அத்துடன், முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் சமாதானத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இந்நாட்டில் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான குற்றச்சட்டுகள் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த மேற்கொள்ளும் அரசியல் ரீதியான செயற்பாடே என்பதில் சந்தேகமில்லை எனவும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Muslim politicians given LTTE weapons inquiry,Muslim politicians given LTTE weapons inquiry