மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு

0
785
Mans body recovered elephant attack Batticaloa

மட்டக்களப்பு – சின்னவத்தை பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் யானை தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (Mans body recovered elephant attack Batticaloa)

குறித்த ஆணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வக்கியல்ல 39 கொலனியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பிராசா குணராசா என்பவரே யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வழமை போன்று கால்நடைகளை மேய்பதற்காக நேற்று அதிகாலை 5 மணியளவில் மாட்டுபட்டிக்கு சென்றுள்ளார்.

எனினும் அவர் காலை 8 மணி வரையில் மாட்டுப்பட்டியடிக்கு வராததை அடுத்து மாட்டுப்பட்டி உரிமையாளர் அவரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

இதன்போது அவரின் உறவினர்கள், வழமை போன்று 5 மணியளவில் மாட்டுப்பட்டிக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரை உறவினர்கள் தேடிய போது, வயல்வெளியில் யானைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மாலை 3 மணியளவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த காலங்களாக மட்டக்களப்பு பகுதியில் பல்வேறு இடங்களில் காட்டு யானைகளில் தாக்குதலில் இலக்காகி பலர் உயிரிழந்த நிலையில், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், யானைத் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்து தருமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையிலும் தொடர்ச்சியான யானைத் தாக்குதலுக்கு மக்கள் இலக்காகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mans body recovered elephant attack Batticaloa