உயிர் பறிக்கும் மருத்துவர்கள்: ஜாக்கிரதை!

0
622
Galaha Hospital Baby Death Issue

கண்டி, கலஹா  மருத்துவமனையில் இடம்பெற்ற சம்பவமானது நாடு பூராகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது  Galaha Hospital Baby Death Issue

மருத்துவரின் கவனயீனத்தால் குழந்தையொன்றின் உயிர் பறிபோன மேற்படி சம்பவம் தொடர்பில் பல கேள்விகள் எழுப்பட்டுள்ளன.

கண்டி கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட இரண்டு வயதான அரசாங்க மருத்துவர் ஒருவர் வைத்தியசாலையில் கடமை புரியாமல் தனது தனிப்பட்ட வைத்திய நிலையத்தில் பணத்துக்கான சேவை வழங்கியதாலேயே இந்தப் பரிதாபம் நிகழ்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு வயதான குழந்தைக்கு அதன் நெஞ்சில் சளி அடைத்ததால் அவதியுற்ற நிலையில் அவரது தாயாரால் கலஹா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வைத்தியர்கள் இல்லை.

கடமையிலிருக்க வேண்டிய வைத்தியர் அவரது தனியார் வைத்திய நிலையத்தில் இருப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உடனே குழந்தையின் தாய் குறித்த மருத்துவரின் தனியார் வைத்திய நிலையத்துக்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார். அப்போது ‘குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் இப்போதே வருகிறேன்’ என பணப் பேய் பிடித்த அந்த டாக்டர் மருத்துவர் கூறியுள்ளார். அவர் கூறியதனை நம்பிய அந்தத் தாய் மீண்டும் கலஹா வைத்தியசாலைக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருந்துள்ளார்.

சரியாக இரண்டு மணித்தியாலயங்கள் கடந்த பின்னர் அந்த மருத்துவர் வைத்தியசாலைக்குச் சென்று குழந்தையை பரிசோதித்து அது இறந்து விட்டது என கூறிச் சென்றுள்ளார். மருத்துவரின் தகவலால் அந்தத்தாய் அதிர்ந்து போனார்.

இருப்பினும், முன்னரே பொய் கூறிய மருத்துவர்  கூறுவதில் அந்தத் தாய் நம்பிக்கையற்றவராகவும் தனது குழந்தை இறக்கவில்லை என்ற ஒரு நம்பிக்கை, நப்பாசையுடன் குழந்தையை பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அம்பியூலன்ஸ் வசதியையாவது செய்து தருமாறு கெஞ்சியுள்ளார். அதிலும் துரதிர்ஷ்டமே. அம்பியூலன்ஸ் உள்ளது. ஆனால் சாரதி இல்லை என பதில் வழங்கப்பட்டுள்ளது.

தனது குழந்தை ஏற்கனே உயிரிழந்ததனை அறியாத அல்லது நம்ப மறுத்த அந்ததத் தாய் ஆட்டோ ஒன்றில் தனது குழந்தையை எடுத்துக் கொண்டு பேராதனை வைத்தியசாலைக்கு விரைந்துள்ளார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை அரை மணி நேரத்துக்கு முன்னர் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியுமென தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவரின் கவனயீனம் தொடர்பில் சமூகவலையமைப்புகளில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

‘சம்பளம் போதாது, அது வேண்டும், இது வேண்டும்’ என்று எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டம், பணிப்பகிஷகரிப்பு என்பவற்றில் ஈடுபட்டு நீதி, நியாயம், உரிமைக்காகவே நாங்கள் போராடுகிறோம் என கூறும் டாக்டர்களே! இன்று உங்களில் ஒருவரால் ஒரு பிஞ்சின் உயிர் கசக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தக் குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் எவ்வாறு நீங்கள் நீதியைப் பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்? தாய் தாலாட்டுப் பாட மடியில் உறங்கிய அந்தக் தளிரை இப்போது நிரந்த உறக்கத்தில் ஆழ்த்தியது உங்களில் ஒருவர்தானே? அந்தக் குழந்தையின் வாழும் உரிமைமை நீங்கள் அல்லவா பறித்துள்ளீர்கள்?

எனவே, நியாயத்துக்காகவே போராடுகிறோம் எனக் கூறும் நீங்கள் குறித்த மருத்துவரை பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் அவரைக் கைது செய்யக் கோரியும் உங்களால் ஆர்ப்பாட்டம், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட முடியும் அல்லவா? இதுவும் நியாயத்துக்கான போராட்டம்தானே?

ஆனால், சட்டம் தனது கடமையைச் செய்து குறித்த மருத்துவரைக் கைது செய்தால் அல்லது கைது செய்ய முயற்சித்தால் அதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம், பணிப்பகிஷ்கரிப்பு அனைத்திலும் நீங்கள் ஈடுபடத்தான் போகிறீர்கள், என்கின்றனர்.

வாகன தீர்வையும், பிள்ளைகளுக்கு உயர் பாடசாலைகள் கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் மருத்துவர்கள் இந்தப் பிள்ளையும், இதேபோன்று கவனயீனத்தாலும், பேராசையாலும், பலியாகும் உயிர்களுக்கு என்ன பதில் கூறப்போகின்றனர்?

உயிரைக் காக்கவேண்டிய , கடவுளுக்கு அடுத்ததாக பார்க்கப்படும் மருத்துவர்கள் என்று  ஆர்ப்பாட்ட ஆயுதத்தை கையிலெடுத்து மக்களை அச்சுறுத்தத் தொடங்கினரோ, அன்றே மருத்துவமும் பத்தோடு பதினோறாவது தொழிலாக மாறிவிட்டது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Galaha Hospital Baby Death Issue, Galaha Hospital Baby Death Issue News