பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விஷேட நிகழ்வு

0
608
Special event missing persons Office

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விஷேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. (Special event missing persons Office)

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலேயே காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்காக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட பேரணி தாமரை தடாக சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி ஜே.ஆர். ஜயவர்த்தன கேந்திர நிலையம் வரை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்த நிகழ்வின் போது விஷேட உரைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.

இந்த நிகழ்வின் விஷேட அதிதிகளாக காணாமல் போனோரின் உறவினர்கள், பொது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் அதிகளவிலானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் அவர்களுக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Special event missing persons Office