வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக இந்தியாவுடன் கைகோர்க்கும் இலங்கை அரசாங்கம்!

0
554
Sri Lankan government seeks India

{ Sri Lankan government seeks India }

வடக்கு, கிழக்கில் பாரிய வீதி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியுமே இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளன. அத்துடன், ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

வடக்கில், பாரிய ரயில் மற்றும் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டங்களிலும் ஏனைய பல சிறிய அபிவிருத்தித் திட்டங்களிலும் இந்தியா ஏற்கனவே பங்களித்து வந்துள்ளது.

இதேவேளை பலாலி விமான நிலைய மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கவுள்ளது.

இந்த நிலையிலேயே, வடக்கில் பாரியளவில் வீதி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

எனினும், நெடுஞ்சாலைகள், சுங்கவழிச் சாலைகள், துணைச் சாலைகள் அல்லது வீதி புனரமைப்பு விடயத்தில் என்ன தேவை என்பது இலங்கை அரசாங்கம் இன்னமும் சரியாக இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை என்று உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Tags: Sri Lankan government seeks India

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites