மீனவர்களால் மீண்டும் பரபரப்பு!

0
519
Point Pedro Fishermen arrest

 

பருத்தித்துறைக் கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான வழியில் தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட 19 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர் Point Pedro Fishermen arrest

அவர்கள் பயணித்த ஆறு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒவ்வொரு படகில் இருந்தும், தலா பல ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான பாரைமீன்களும் மீட்கப்பட்டன. 15 ஆயிரம் கிலோ மீன்கள் அந்தப் படகுகளில் இருந்ததாக மக்கள் உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தவில்லை.

கடற்படையினரும் அதிகாரிகளும் கைப்பற்றப்பட்ட மீன்களின் தொகையைக் குறைத்துக்காட்ட முயற்சிக்கிறர்கள் என்று உள்ளுர் மீனவர்களும் மக்களும் சந்தேகப்பட்டதன் காரணமாக கடற்படையினருடனும் அதிகாரிகளுடனும் அவர்கள் முரண்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் நேற்றிரவு பதற்றம் நிலவியது.

ஏற்கனவே வடமராட்சிக் கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பு உள்ளிட்டவற்றில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் இயங்குகின்றனர் என்கிற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் நேற்று இவ்வாறான சம்பவம் நடைபெற்றதும் வடமராட்சி மீனவர்களை மேலும் கோபத்தில் ஆழ்த்தியது. கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் பாரமெடுக்கும் வரை வடமராட்சி மீனவர்கள் கடற்படைமுகாம் முன் அமர்ந்திருந்தனர். பிடிக்கப்பட்ட மீன்களை தமக்கு முன்னாலேயே அளவிடுமாறும் மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலமை காணப்பட்டது.

கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாம் சட்டவிரோத (சுருக்குவலை) தொழில் ஈடுபடவில்லை, என்றும், அனுமதிபெற்ற தொழிலையே மேற்கொண்டோம் என்றும் தெரிவித்தனர். எனினும் வடமராட்சி மீனவர்களின் கொந்தளிப்பால் அவர்கள் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிடிக்கப்பட்ட மீன்களை அளவிடும் நடவடிக்கைகள் இரவிரவாக மேற்கொள்ளப்பட்டன.

வடமராட்சிக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டத்துக்குப் புறம்தொபான ழிலை நிறுத்துமாறு தெரிவித்து வடமராட்சியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். கடற்படைக்கு எதிராகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அண்மையில் யாழ்ப்பாணம் வந்த கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடினர். சட்டவிரோத தொழில்களை நிறுத்துமாறும், வடமராடசியில் உள்ள கடலட்டை நிறுவனங்களை இனி அந்தத் தொழிலை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.