Categories: Breaking NewsHot NewsNEWS

மியன்மாருக்கு ஏற்பட்ட நிலையே இலங்கைக்கும் ஏற்படும்

மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரனையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளதை போன்று இலங்கைக்கும் ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிவித்த அட்மிரல் சரத் வீரசேகர, மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார். (myanmar sri lanka sarath weerasekara)

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டினை விசாரிக்க ஐ. நா அழைத்துள்ளமையானது எமது நாட்டிற்கும் எச்சரிக்கை விடுப்பதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது போர் குற்றங்கள் இடம் பெற்றதாகவும், இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் பொய்யாக குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகளும் புலம் பெயர் அமைப்புக்களும் முன்வைத்தது.

அடுத்த மாதம் ஐ. நா சபையில் இடம் பெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பாரிய எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும். மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க தயாராகவே உள்ளது. ஆனால் உள்ளக அறிக்கையினை மேற்கொள்வதாக குறிப்பிட்ட அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கதத்தின் எவ்வித அனுமதியும் இன்றி ஐ.நா வின் கருத்துக்களுக்கு சம்மதம் தெரிவித்தமையே பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக சில அரச சார்பற்ற அமைப்புக்களும், இயக்கங்களும் மாத்திரமே குரல் கொடுத்தது. அரசாங்கம் எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்பட்டது.

ஐ. நா. அரசாங்கத்திற்கு வழங்கிய காலவகாசம் நிறைவுறும் தருவாயிலே காணப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகளிடம், தமிழ்தேசிய கூட்டமைப்பினர். சர்வதேச விசாரனையினையே கோருகின்றனர். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் மந்தகரமாக செயற்பட்டால் மியன்மார் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை எமது நாட்டு இராணுவத்தினருக்கு ஏற்படும்” என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:myanmar sri lanka sarath weerasekara,myanmar sri lanka sarath weerasekara,

Santhosh M

Share
Published by
Santhosh M

Recent Posts

உதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி, 21 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைச் செய்து நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்…

8 mins ago

Raja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

பர்மா, ஜாக்சன் துரை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. Raja Ranguski Review Tamil News இதில் ஹீரோவாக ‘மெட்ரோ’…

17 mins ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

23 mins ago

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன் போது மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. SLFP Dismiss 5 Organizers Sri Lanka Latest…

28 mins ago

மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை

மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் புதைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (cag worker murdered honour killing mumbai India Tamil News)…

30 mins ago

வைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…

‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு நடிகர் வைபவ் ‘காட்டேரி, ஆர்.கே - நகர்’ படங்களில் நடித்து வருகிறார். இப்போது வைபவ் மற்றுமொரு புதிய படத்தில் வைபவ் நடிப்பதாக தகவல்கள்…

34 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.