தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அறையிலிருந்து வெளியாகும் கழிவுகள் அகற்றப்படாததால் கொடிய நோய் பரவும் அபாயம்!

0
528
Disease exposed removal wastes Hospital

{ Disease exposed removal wastes Hospital }
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அறையிலிருந்து வெளியேற்றப்படும் பெருமளவிலான கழிவுகள் அதிகளவில் தேங்கி இருப்பதால் இது வைத்தியசாலைக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என தாதியரின் சங்க தலைவர் திரு மெதிவத்த கூறியுள்ளார்.

மேலும், தேசிய வைத்தியசாலையிலிருக்கும் அனைத்து சத்திரசிகிச்சை அறையிலிருந்து நாளாந்தம் வெளியேற்றபடும் கழிவுகளில் கை விரல்கள், இறைச்சி துண்டுகள், இரத்தம் துடைத்த துண்டுகள் இக் கழிவுகளில் உள்ளடங்கியிருப்பதோடு, அறைகளிலிருந்து வெளியேற்றப்படும் மருந்து ஊசிகள் மற்றும் வெட்டும் சிறிய கத்திகள் என்பன அதிகளவில் அடங்குகின்றன என தகவல் தெரிவிக்கின்றன.

மேலும்,இதுவரை நாளாந்தம் வெளியேற்றப்படும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்ட நிலையிலும், கடந்த மாதம் முழுவதும் வைத்தியசாலையிலிருந்து அகற்றப்பட்ட கழிவுகள் வைத்திய சாலையிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் இதன் அளவு தற்போது 1000 kg அதிகமான கழிவுகள் சேர்ந்து இருப்பதாக மெதிவத்த அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையினால் வைத்தியசாலையின் சுற்றாடலும் , ஊழியர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, பயங்கரமான நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மெதிவத்த கூறியுள்ளார்.

இந்த பிரச்னையை தொடர்பில் குறிப்பிட்ட சுகாதார அமைச்சுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் இதுவரை எந்த தீர்வும் கொடுக்கவில்லை என்று திரு மெதிவத்த குற்றம் சாடியுள்ளார்.

Tags: Disease exposed removal wastes Hospital

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]

Tamil News Group websites