இலங்கை பிக்குவுக்கு ஸ்கொட்லாந்தில் தண்டனை- 3 பெண்கள் மீது பாலியல் வன்முறை!

0
404
Scotland court convicted sexually abusing buddhist monk Sri Lanka

(Scotland court convicted sexually abusing buddhist monk Sri Lanka)

இலங்கை பௌத்த பிக்கு ஒருவருக்கு 3 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஸ்கொட்லாந்து நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து, க்லாஸ்கோவில் உள்ள மனநல மையத்தில் 3 பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக ரேவத்த கம்புருவெல என்ற 47 வயதான பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதங்களில் மூன்று பெண்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை அல்லது தவறான முறையில் நடந்து கொண்டமை உட்பட 3 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் தான் குறித்த பிக்குவுடன் யோகா அறையில் தனியாக இருந்த போது அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும், தன்னிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும், இந்த வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யோகா பாடத்தின் போது அவர் தவறாக நடந்து கொண்ட முறையினை குறித்த பெண் நீதிமன்றத்தில் விபரித்துள்ளார்.

அதேபோல், மேலும் இரண்டு பெண்களிடம் அவர் தவறாக நடத்து கொண்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய அவருக்கு 200 மணித்தியாலங்கள் சம்பளம் இல்லாத வேலை வழங்க க்லாஸ்கோ, ஷெரீப் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளியான தேரரை மக்களுடன் பணியாற்ற முடியாத பட்டியலில் இணைக்க வேண்டுமா என்பது குறித்து ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Scotland court convicted sexually abusing buddhist monk Sri Lanka)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites