மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!

0
391
Minnariya National Park temporarily closed

{ Minnariya National Park temporarily closed }

மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை மீட்க்கும் பொருட்டு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும், இச் சந்தேக நபரை மீட்கும் பொருட்டு நேற்று (26) இரவு இனம் தெரியாத குழு ஒன்று மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளை தாக்கிவிட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த சந்தேக நபரை காப்பாற்றிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நூற்றுக்கும் அதிகமான நபர்கள் இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தாக்குதலில் 4 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு இப் பூங்காவில் மிருகங்களை வேட்டையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இச் சந்தேக நபர், அனுமதிப்பத்திரம் இல்லாமால் மீன்பிடியில் ஈடுபட்டு வந்ததற்காகவே கைது செய்து வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டிருந்த ஒருவரையே இவ்வாறு காப்பாற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Minnariya National Park temporarily closed

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites