வாஜ்பாய் அஸ்தியுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உயிர் தப்பினர்!

0
555
boat Vajpayee Ashtis collapsed

{ boat Vajpayee Ashtis collapsed }
உத்தரபிரதேசத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாள் 17-ந்தேதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள நதிகளில் கரைக்க பா.ஜ.க. முடிவு செய்தது. அதன்படி கடந்த 22-ந்தேதி அனைத்து மாநில பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு வரவழைத்து பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது.

வாஜ்பாய் அஸ்தியை கரைக்கும் பணியில் பா.ஜனதாவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தியை கரைக்க பா.ஜனதா நிர்வாகிகள் படகில் சென்றனர். முன்னாள் மாநில பா.ஜனதா தலைவர் ராம் திரிபாதி, எம்.பி. ஹரிஷ் திரிவேதி, எம்.எல்.ஏ. ராம் சவுத்ரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், போலீஸ் சூப்பிரண்டு திலீப்குமார் உள்பட பலர் படகில் இருந்தனர்.

அதிகமான கூட்டத்தால் ஆற்றில் சென்ற சிறிய படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்ததால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் தடுமாறி ஆற்றில் குதித்தனர். உடனே போலீசார் ஆற்றுக்குள் குதித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலரை காப்பாற்றினர்.

இந்த விபத்தில் அனைவரும் உயிர் தப்பினர். யாரும் ஆற்றில் மூழ்காமல் போலீசார் காப்பாற்றினார்கள்.

Tags: boat Vajpayee Ashtis collapsed

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :