டொலரின் தாக்கத்திற்கு பிரதமர் விளக்கம்

0
335
srilankan rupee down again american dollar prime minister definition

இலங்கையில் மாத்திரமல்ல ஏனைய நாடுகளிலும் டொலரின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். srilankan rupee down again american dollar prime minister definition

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் டொலரின் மதிப்பு தாக்கத்தை செலுத்தியது, இருந்தப்போதிலும் இது தற்காலிகமாக இருக்கும் பிரச்சினையாகவும் கருதப்படுகின்றது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று பாரிய வீழ்ச்சியை காட்டியது.

மத்திய வங்கியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 162 ரூபா 11 சதமாக பதிவாகியிருந்தது.

டொலர் தொடர்பில் கொள்வனவாளர்களிடையே காணப்படும் கேள்வி நிலைமையே இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
srilankan rupee down again american dollar prime minister definition

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites