வன்னியை ஆட்சி செய்த இறுதிமன்னனின் 215 ஆம் வருட நினைவு தினம்

0
585
215th anniversary vanni king Bandaravanniyan commemorated

(215th anniversary vanni king Bandaravanniyan commemorated)

வன்னியை ஆட்சி செய்த இறுதி மாமன்னன் பண்டாரவன்னியனின் 215 வது ஆண்டு நினைவு நாள் திகதி இன்று (25) பிற்பகல் கற்சிலைமடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பண்டாரவன்னியன் அறங்காவலர் கழக தலைவர் இ.சந்திரரூபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

முன்னதாக கற்சிலைமடு சந்தியிலிருந்து பாரம்பரிய கலை அம்சங்களோடு பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகம் வரை கலாச்சார பவனி இடம்பெற்றது.

பேரணி பண்டாரவன்னியன் நினைவுச்சிலை வளாகத்தை அடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற வன்னியின் இறுதி மன்னன் மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தமிழரசு கட்சி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண சபை விவசாய அமைச்சர் சிவநேசன் மாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி இடம்பெற்றதை தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.

(215th anniversary vanni king Bandaravanniyan commemorated)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites