“காணாமல் போனோரைப் பட்டியல் படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம்”

0
454
Sri Lanka Tamil News,Lka News

இலங்கையில் காணாமல் போனோரைப் பட்டியல் படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இருப்பதாக, காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதானி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். Saliya Pieris Missing Persons Office

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“எமது அலுவலகம் இதுவரையில் 2000க்கும் அதிகமான காணாமல் போனோரது உறவினர்களை சந்தித்திருக்கிறது.

இலங்கையிலேயே அதிக எண்ணிக்கையானோர் காணாமல் போய் இருக்கின்றனர்.

சிவில் சமுக அமைப்புகளில் 16 ஆயிரம் காணாமல் போனோர் குறித்த விபரங்களைக் கொண்டுள்ளன” என்றார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 5100 பேர் காணாமல் போனவர்களாக பதிவு செய்திருப்பதுடன், பரணகம ஆணைக்குழுவினால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் போய் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக 13 ஆயிரம் காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான தகவல்களை ஒன்று திரட்டி முழுமையான எண்ணிக்கைப் பட்டியலை தயாரிப்பது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் காணாமல் போனோர் அலுவலகம் இதுவரையில் மேற்கொண்ட செயற்பாடுகளின் அடிப்படையிலான இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை