Categories: NEWSTop Story

பெண்களுடன் சேஷ்டை புரிந்த இருவருக்கு பெண் குரலில் அழைத்து இளைஞர்கள் செய்த வேலை!

கையடக்கத் தொலைபேசிக்கான சிம் அட்டைகளை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேஷ்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் அவர்களை நையப்புடைத்து அனுப்பிவைத்ததுடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்துள்ளனர் என யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. Jaffna Two Young Men Attack Misbehave Girls Tamil News

குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாது ,

“யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது.

கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்களால் வெட்டிவிட்டு, எமது மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்தது” என கைபேசி சிம் அட்டை விற்பனை செய்யும் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் தாம் இருவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , குறித்த சம்பவம் இரவு ஏழு மணியளவில் நடைபெற்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், குறித்த இரு இளைஞர்களும் இளம் பெண்களுக்கு விற்பனை செய்த சிம் அட்டைகளுக்கு அழைப்பு எடுத்து தொந்தரவு வழங்குபவர்கள் எனவும், பெண் பிள்ளைகளுடன் சேஷ்டைவிட்ட காரணத்தால்தான், இளைஞர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கொக்குவில் கிழக்குப் பகுதிக்கு அழைத்து தாக்கியுள்ளனர் எனவும் , அவர்களுக்கு அழைப்பை எடுத்து பெண் குரலில் கதைத்துதான் கொக்குவில் கிழக்கு பகுதிக்கு அழைத்து இரு இளைஞர்களையும் தாக்கிய பின்னர் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது என விசாரணைகளில் கண்டறித்துள்ளனர்.

அத்துடன் தம்மை வெட்டினார்கள் என இளைஞர்கள் இருவரும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள போதும், அவர்களுக்கு அடி காயங்களே உள்ளன என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து தாம் முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Jaffna Two Young Men Attack Misbehave Girls Tamil News

Recent Posts

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

23 mins ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

40 mins ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

59 mins ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

2 hours ago

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

2 hours ago

மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.