மஹிந்தவுக்கு மட்டுமல்ல சந்திரிக்காவும் மீண்டுமொருமுறை ஜனாதிபதியாக முடியாது!

0
829
Minister Thuminda Tisanayaka Presidential Election Statement

19ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு கூட 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். Minister Thuminda Tisanayaka Presidential Election Statement Tamil News

மகாவலி அபிவிருத்தி நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

மஹிந்தவின் குடும்ப உறுப்பினர்களை தவிர கட்சியின் பிறிதொரு உறுப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தகுதியற்றவர்களா? அல்லது மஹிந்த பிறிதொருவரை களமறக்க தயாரில்லையா? குடும்ப ஆட்சியினை தோற்றுவித்துதான் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொது எதிரணியினர் காணப்படுவது அவர்களது இயலாமையினை வெளிப்படுத்துகின்றது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் பதவி மோகத்தின் காரணமாக மஹிந்த ஆட்சியை பெற பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்.

இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னரும் 2015ஆம் ஆண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார்.

பின்னர் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலிலும் படு தோல்வியடைந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார்.

தற்போது 19ஆவது அரசியலமைப்பினை மீறி தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விடாதா என்ற நப்பாசையில் சட்ட வியாக்கியானம் கோருகின்றார்.

19ஆவது அரசியலமைப்பு மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க, தற்போதைய ஜனாதபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஏற்புடையதாகவே காணப்படுகின்றது.

மஹிந்த மாத்திரம் நாட்டுக்கு விதிவிலக்கல்ல மஹிந்தவும் கடந்த காலங்களில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கவில்லை. அவர் குடும்ப ஆட்சியை உருவாக்குவதிலே தீவிரமாக காணப்பட்டார்.

தன் கட்சியில் வேட்பாளர் தொடர்பில் உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கட்சியை பலவீனப்படுத்துமோ என்ற அச்சத்திலே அவர் ஜனாதிபதியாக போட்டியிடும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் எவ்வாறு இருப்பினும் மஹிந்தவால் இனி ஒரு போதும் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது” என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites