Categories: NEWS

கொக்குவில் மருத்துவர் வீட்டின் மீதான தாக்குதல் சந்தேகநபருக்கு பிணை!

கொக்குவில் சம்பியன் வீதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பிச் சென்றது. Jaffna Kokuvil Doctor Home Attack Accuse Bail Tamil News

குறித்த மருத்துவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் (செவ்வாய்க்கிழமை) குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்பதால் அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் அரசடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Jaffna Kokuvil Doctor Home Attack Accuse Bail

Recent Posts

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

12 mins ago

ஒடிசாவை தாக்கிய புயல்; 08 மாவட்டங்களில் வெள்ளம்

ஒடிசாவை தாக்கிய புயலால் 08 மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கன மழையால் எங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. (Cyclone Daye storm IMD Rain Warning two days…

22 mins ago

விசித்திரமான நண்பர்களுடன் வாழும் பிரான்ஸ் நாட்டவர்!

உலகிலேயே விசித்திரமான நண்பர்களுடன் வாழ்கிறார் ஒரு பிரான்ஸ்காரர். பிரான்ஸ் நாட்டின் லூரே நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் பிலிப் கில்லட் என்ற 67 வயதுக்காரர் விலங்குகளின் காதலர்.…

37 mins ago

ஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…

44 mins ago

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!

வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியில் இருவேறு…

45 mins ago

நடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு

காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை…

46 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.