பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்

0
452
Rx100 Actress Payal Rajput complaint, Rx100 Actress Payal Rajput, Rx100 Actress Payal, Rx100 Actress, Rx100, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

ஆர்எக்ஸ் 100 நடிகை பாயல் ராஜ்புட், தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாயல் ராஜ்புட் பஞ்சாபி படங்களில் நடித்து வந்தவர், ஆர்எக்ஸ் 100 என்ற படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, படுகவர்ச்சியாக நடித்ததுடன், துணிந்து லிப் டூ லிப் காட்சிகளிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.Rx100 Actress Payal Rajput complaint

நடிகை ஸ்ரீ ரெட்டியின் துணிச்சலான குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு நடிகைகளை அழைக்கும் ட்ரென்ட் குறைந்துள்ளது என திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் குறைந்துள்ளதே தவிர முற்றும் அழிந்து போகவில்லை என்றே கூற வேண்டும். அது போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு கடந்த 4 நாட்களுக்கு முன்பு எனக்கு நடந்தது, என பேட்டி ஒன்றில் நடிகை பாயல் தெரிவித்துள்ளார்.

ஆர்எக்ஸ் 100 படத்தின் பின் எனக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிகின்றது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். என் திறமையால் தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், உங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று அவரிடம் கண்டிப்பாக கூறிவிட்டேன் என்றார்.

ஆர்எக்ஸ் 100 படத்தில் கதைப்படி நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருந்ததால் தான் அப்படி நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் அந்த படத்தின் பின் எனது கேரக்டர் இது தான் என முடிவெடுத்து இப்படி ஒருவர் என்னை அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியது எனக்கு கவலை அளித்துள்ளது என்றார்.

Tag: Rx100 Actress Payal Rajput complaint

எமது ஏனைய தளங்கள்