இனி சிறிதளவு மழை பெய்தாலும் கேரளா மோசமான சூழலை சந்திக்க நேரிடும் – அதிர்ச்சி தகவல்

0
634
Evenhere little rain Kerala will face bad environment shocking information

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால், இதற்கான எச்சரிக்கைகளை இயற்கை வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன.

மும்பை நகரம் அடிக்கடி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017- ம் ஆண்டு பெங்களூரு நகரமும், 2015-ல் சென்னையும், ஸ்ரீநகர் 2014-ம் ஆண்டும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஆகவே இனி வரக்கூடியகாலங்களில் காலங்களில் `தீவிர காலநிலை நிகழ்வுகள்’ (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன.

மேலும் மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதை உறுதிப்படுத்தியது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :