விஜயகலாவின் இலங்கை குடியுரிமை பறிக்கப்படும் அபாயம்!

0
641

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தேவையென பகிரங்கமாக கருத்து வெளியிட்ட அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என சட்ட மா அதிபர் திணைக்களம், சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. Vijayakala Maheswaran LTTE Speech Issue Tamil News

பொலிஸாரின் அறிக்கைகளின் அடிப்படையில் எடுக்கப்படக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்துள்ளது.

இதன் பிரகாரம் , விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடலாம்.

அதுமட்டுமன்றி , இலங்கையில் தனியான இராச்சியம் அமைப்பது குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்தல், அனுசரணை வழங்குதல் போன்றவற்றை செய்வதில்லை என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில் அதனை மீறியதனால் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்தாவதுடன், ஏழு ஆண்டுகளுக்கு குடியுரிமையும் ரத்து செய்யப்படும் என குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites