Categories: Head LineNEWS

காணிகளை விடுவிக்கும் இரா­ணுவ தள­ப­தி­யின் முடிவு முட்டாள்தனமானது! பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா சீற்றம்!

வடக்கில் பொது­மக்­களின் காணி­களை மீள ஒப்­ப­டைப்­ப­தற்­காக இரா­ணுவ முகாம்­களை மூடி, முகாம்­களின் அளவைச் சுருக்கும் இரா­ணுவ தள­ப­தியின் முடிவு முட்­டாள்­த­ன­மா­னது என்று அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார். North East Land Release Sarath Fonseka Angry Statement Tamil News

ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அவர் அளித்­துள்ள செவ்­வியிலேயே இதனைத் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,

நாங்கள் விடு­தலைப் புலி­களை அழித்து விட்டோம். அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான பின்­ன­ணி­யையும் அந்தப் பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கு­மான சூழலை உரு­வாக்­கி­யி­ருக்­கிறோம். அது போது­மா­ன­தல்ல.

அதி­காரப் பகிர்வை செய்ய வேண்­டு­மானால் நாம் பொது­ வாக்­கெ­டுப்­புக்கு செல்ல வேண்டும். பெரும்­பான்­மை­யான மக்கள் அதனை எதிர்க்­கி­றார்கள்.

தமிழ் மக்கள் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியில் ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர அர­சி­யலில் அல்ல. மக்கள் எதனைக் கேட்­கி­றார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற வேண்­டுமே தவிர, அர­சி­யல்­வா­தி­களின் தேவை­களை அல்ல. சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் வடக்கிலுள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்ற வேண்டும் என்­கி­றார்கள். எந்த அடிப்­ப­டை­யிலும் அவர்­களின் அந்த அழுத்­தங்­க­ளுக்கு விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. நாட்டிலிருந்து இரா­ணு­வத்தை உங்­களால் அகற்ற முடி­யாது.

நாட்டின் எல்லா இடங்­க­ளிலும் இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்னம் இருக்க வேண்­டிய தேவையுள்­ளது. இரா­ணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும். வடக் கில் இருக்கக் கூடாது என்று உங்­களால் கூற­மு­டி­யாது. இரா­ணு­வத்தின் பரு­மனைக் குறைக்க வேண்­டிய தேவை இல்லை என்­பதே எனது கருத்து.

எனது தனிப்­பட்ட கருத்­தின்­படி, இரா­ணு­வத்தின் குறைந்­த­பட்ச பலம் 1,50,000 இற்கு மேல் இருக்க வேண்டும். உள்­நாட்டுப் பிரச்­சி­னைக்­காக மாத்­தி­ர­மல்ல. வெளி­நாட்டு அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட எந்­த­வொரு நிலை­மை­யையும் எதிர்­கொள்­வ­தற்கும் நாட்டின் இரா­ணுவம் தயா­ராக இருக்க வேண்டும்.

சிங்­கப்பூர் ஒரு சிறிய நாடு. அவர்கள் 3 மில்­லியன் பேரைக் கொண்ட இரா­ணுவப் படையை வைத்­தி­ருக்­கி­றார்கள். ஒவ்­வொரு குடி­ம­கனுக்கும் போரி­டு­வ­தற்­கான பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. எனினும் அவர்கள் அணி­தி­ரட்­டப்­ப­ட­வில்லை.

வடக்கில் சில பகு­தி­களிலிருந்து இரா­ணு­வத்­தி­னரை முழு­மை­யாக வெளி­யேற்றக் கூடாது.

பொது­மக்­களின் காணி­களை திரும்ப அவர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காக சில இரா­ணுவ முகாம்­களை மூடி, இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­களின் அளவைக் குறைப்­பது பற்றி இரா­ணுவ தள­பதி பெரு­மை­யாகப் பேசி­யதைக் கேள்­விப்­பட்டேன். இது முட்­டாள்­த­ன­மா­னது.

ஒவ்­வொரு அங்­குல நிலத்­தையும் மக்­க­ளுக்கு மீள வழங்­கு­வ­தற்­காக முகாம்­களை மூடு­வ­தை­யிட்டு பெரு­மைப்­பட முடி­யாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்­களின் கருத்தைக் கேட்க வேண்டும். சரி­யான மதிப்­பீட்டை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: North East Land Release Sarath Fonseka Angry Statement

Recent Posts

“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

5 mins ago

இலங்கை வரும் இங்கிலாந்து ஒரு நாள் அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள், ஒரு டி-20 போட்டிகளில் இரு…

6 mins ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

7 mins ago

டொலர் பெறுமதி உயர்வுக்கு டிரம்பே காரணம்! கலாநிதி ஹர்ஷத சில்வா!

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துவரும் பொருளாதார நடவடிக்கைகள் இந்த டொலர் விலை உயர்வுக்கு காரணமாகும் எனவும், இந்த விலை அதிகரிப்பு பிராந்திய நாடுகளையும் பாதித்துள்ளதாகவும் அமைச்சர்…

14 mins ago

நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி

நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு…

29 mins ago

ஜம்மு காஷ்மீரில் 4 பொலிஸார் மாயம்; ஆயுததாரிகள் கடத்தியிருக்கலாம் என அச்சம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் 3 சிறப்பு பொலிஸ் படை அதிகாரிகள், 1 பாதுகாவலர் திடீரென காணாமல் போனதால் அவர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவி…

31 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.