மன்னாரில் அரியவகை உயிரினங்களுக்கு எமனாகியுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்!

0
596

மன்னார் தீவு கடலில் பிளாஸ்ரிக் கழிவுகள் கரையொதுங்கி உள்ள விவகாரம் தொடர்பில் பலவிதமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Manner Sea Plastic Wastages Issue Tamil Issue

இந்த கழிவுகள் காரணமாக பல அரிய கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றது.

இந்த கழிவுகள் இந்தியாவில் இருந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பட்டு வருகின்றது.

தலைமன்னார், மன்னார் கடற்கரை பகுதிகளுக்கு இந்திய நிறுவனங்களின் முகவரிகள் குறிப்பிட்டு, பல்வேறு கழிவுகள் மற்றும் நச்சுப் பொருட்கள் கடலில் அடித்து வரப்படுகின்றன.

இதனால் மீன் வகைகள் பெருமளவில் அழிந்து வருவதாகவும் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் மன்னார் பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் புத்தளம் கடற்கரை பிரதேசத்திற்கு கடலில் அடித்து வரப்பட்டு குவிந்து கிடந்த கழிவுப் பொருட்கள் தற்போது மன்னார் பகுதிகளுக்கும் அடித்து வரப்படுகின்றன.

இதனால், பொது மக்களுக்கும் மீனவர்களுக்கும் வடக்கு கடற்கரைகள் இழந்துப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மீனவர்களின் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடற்சுற்றுச்சூழல் அதிகாரச் சபையினால் இன்றைய தினம் குறிப்பிட்ட இந்த இந்திய கழிவுட் பொருட்களை விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கழிவுகளில் உரிமையாளர்கள் தொடர்பாக உண்மைகளை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறிப்பிட்ட கழிவுப் பொருட்கள் மன்னார் கடற்கரை பகுதிக்கு கடலில் அடித்து வருவதினால், ஏற்கனவே மன்னார் கடற்கரையோரத்தில் அரிய மீன் இனங்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மீன் வகைகள் இறந்து குவிந்து கிடப்பதுடன், இவைகளுள் கடல் ஆமைகளும் உள்ளதாக மன்னார் மீனவர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவில் இருந்து கடலில் அடித்துவரப்படும் கழிவுப் பொருட்களில் உள்ள நச்சுப் பொருட்களினால், ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகளால், மீன்வாடிகளில் மீனவர்களுக்கு வாழ்வதற்கும் ஆபத்தாக உள்ளதாக மன்னார் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites