அகில இலங்கை பல்கலைக்கழகங்களிலேயே மிகப்பெரிய அரங்கம் இந்த மாதம் திறக்கப்படவுள்ளது

0
454
Largest auditorium Sri Lankan University declared open month

(Largest auditorium Sri Lankan University declared open month)

அகில இலங்கை பல்கலைக்கழகங்களிலேயே மிகப்பெரிய அரங்கமான ருஹுன பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த அரங்கம் இந்த மாதம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உயர் கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு குறித்த அரங்கத்தை தயாரிப்பதற்காக 265 மில்லியன் ரூபா தொகையை வழங்கியுள்ளது.

இந்த திட்டமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்கான ஒரு அங்கமாகும்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிட்டது.

இதனையடுத்து, அரங்கத்தின் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லிங்க் இஞ்சினியரின் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ​​அடிக்கல் நட்டு வைத்து 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது.

சுமார் 3000 சதுர மீட்டர் பரப்பளவில், அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய மிகப்பெரிய திரையரங்கு ஒன்றுடனும் 1500 ஆசனங்களுடனும், ருஹுன பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையான கட்டிடக்கலை மாதிரியைக் கொண்டு ரவீந்திரநாத் தாகூர் ஞாபகர்த்த அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Largest auditorium Sri Lankan University declared open month)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites