Type to search

ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை

Head Line NEWS Top Story

ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம் சத்திரச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. (Gnanasara Thera undergo surgery today)

இந்தத் தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் பிபாத் வேரத்த தெரிவித்தார்.

ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக சத்திரசிகிச்சை பிற்போடப்பட்டிருந்தது.

தற்போதைய நிலையில் அவர் சத்திரச் சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் உள்ளதால், இன்றைய தினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர், சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பாக கடந்த 06 ஆம் திகதி ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில், 6 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர்,

சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Gnanasara Thera undergo surgery today


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: