வடக்கின் கரையோரம் சீனாவின் கைகளுக்கு செல்கிறது! ஆய்வு பணி என்னும் பெயரில் நடக்கும் அபகரிப்பு!

0
543

நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. China Takes Sri Lanka North Coastal Area Control Tamil News

இந்நிலையில், வடக்கின் சில பகுதிகளையும் சீனாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த சீன கப்பல் தொடர்பாக அதன் எச்சங்களையும் சான்றுகளையும் மீட்கும் பணிகளானது யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதனை இலங்கை மத்திய கலாச்சார நிதியமும் சீன அரசாங்கமும் இணைந்து முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தின் கரையோர பகுதிகளான ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கரையோர பகுதிகளிலும் சீனாவின் பண்டைய கால எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அதனை மீட்பதற்காகவே இவ்வாறு சீனாவிற்கு அப் பகுதிகளை வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் வடக்கின் கரையோர பகுதிகளை, குறிப்பிட்ட கால ஆண்டிற்கு தொல்லியல் ஆய்விகளை மேற்கொள்வதற்கு வழங்குவதானது இந்தியாவிற்கு எதிரான பாதுகாப்புக்கு குந்தமாக அமையலாம் என அரசியல் அவதானிகள் கருத்து கூறியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites