வெள்ளத்தில் துவளும் கேரளாவுக்கு உதவ முன்வரும் மத்திய கிழக்கு நாடுகள்!

0
523
saudi arabiya kuwait governments help kerala flood disaster

(saudi arabiya kuwait governments help kerala flood disaster)

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரை களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய அனர்த்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 357 பேர் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர். இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

பல்வேறு தரப்பினர் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர்.

நடிகர், நடிகர்கள், மாநில அரசுகள் பண உதவியை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் ரூ.35 கோடியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறது. சேக் அப்துல்லா பின் நசீர் பின் கலிபா அல் தானி இதைத் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேவேளை, கேரளாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு 69.80 கோடி ரூபாவை சவூதி அரசாங்கம் முதல்கட்ட உதவியாக வழங்கியுள்ளது.

(saudi arabiya kuwait governments help kerala flood disaster)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites