2019 ஆம் ஆண்டில் புதிய அரசியல் முன்னணி ஸ்தாபிக்கப்படும் – ஜே.வி.பி. அறிவிப்பு

0
383
current political system not favor recovering recession Sri Lanka

(current political system not favor recovering recession Sri Lanka)

இலங்கை சமகாலத்தில் அடைந்துள்ள பின்னடைவை சரிசெய்து அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு தற்பொழுது உள்ள அரசியல் முறைமை உகந்ததாக அமையாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் புதிய அரசியல் முன்னணி ஒன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பதுளை அஞ்சலக கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

புதிய முன்னணியில் நாட்டிலுள்ள புத்திஜீவிகள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் உள்ளடக்கப்படுவார்கள்.

தற்பொழுதுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்கள் குறைந்தபட்சம் சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்களாக உள்ளனர்.

இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தமையினாலேயே இந்த நிலை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் படித்தவர்கள் செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(current political system not favor recovering recession Sri Lanka)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites