பொலிஸார் தாக்கினால் அஞ்ச வேண்டாம் – அதுபற்றி விசாரிக்க விஷேட பிரிவு வருகிறது

0
395
special responsibility under National Policy Human Rights

(special responsibility under National Policy Human Rights)

மனிதவுரிமை தேசிய கொள்கையின் கீழ் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரிங்க சுமனதாஸ தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படும் சந்தேகநபர்கள் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக இடம்பெற்ற ஊடக நேர்காணலில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், விஷேட பிரிவொன்றை அமைத்து பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகின்றவர்கள் பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளை இலக்காக கொண்டு நாட்டில் மனித உரிமைகள் சம்பந்தமான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

மனித உரிமைகளை பாதுகாக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றால் கூட்டுக் குழுவொன்றை இயங்குவதாக அவர் இந்த நேர்காணலின் போது தெரிவித்தார்.

(special responsibility under National Policy Human Rights)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites