கொபி அனான் காலமானார்

0
805
former united nation genaral secaratory kofi annan death today morning

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கொபி அனான் தனது 80 ஆவது வயதில் காலமாகியுள்ளார் என அவரது அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது. former united nation genaral secaratory kofi annan death today morning

கொபி அனான் உடல் நலக்குறைவால் சுவிஸ்சர்லாந்தின் பெர்ன் நகரிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி கானாவில் போபேன்ட்றோஸ் பகுதியில் பிறந்தவர் ஆவர்.

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் 7 ஆவது செயலாளராக இருந்தவர் என்பதோடு கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி குறித்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

1952 ஆம் ஆண்டு கொபி அனான் உலக சுகாதார அமைப்பில் ஒரு திட்டமிடல் அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்தார்.

1974 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை அவர் கானா நாட்டினுடைய சுற்றுலாத்துறை இயக்குனராக பதவி வகித்தார்.

1980 களின் பிற்பகுதியில் அனான் ஐக்கிய நாடுகள் சபையில் உதவி பொது செயலாளராக மூன்று பதவிகளில் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு கொபி அனான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக “ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்ககாக உழைத்தத்திற்காக” அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 23 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாக பதவி வகித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கொபி அனான் சிறப்பு பிரதிநிதி பதவியிலிருந்து விலகினார்.

கானா நாட்டில் இரட்டையர்களுக்கு தனி கௌரவம் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் கொபி அனானும் அவரது சகோதரியும் இரட்டையர்களாவர்.

இரட்டையர்கள் பிறந்தால் பிறந்த நாளை அவர்களுக்கு பெயராக சூட்டுவது வழக்கம்.

 

கொபி அனான் வௌ்ளிக்கிழமை பிறந்தவராவார்,

கானா நாட்டு மொழிக்கமைய வௌ்ளிக்கிழமையை அவர்கள் கொபி என்று பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

ஆகையினால் இவருக்கு கொபி அனான் என்ற பெயரினை சூட்டியுள்ளனர்.

அத்துடன் கொபி அனான் தனது பாடசாலை கல்வியை முடித்த ஆண்டான 1957 ஆம் ஆண்டு கானா நாடானது வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அனான் ஆங்கிலம் பிரெஞ், மற்றும் அகான் மொழிகளில் தேர்ச்சிப்பெற்றவராவார்.

ஆனால் அகான் மொழி இதுவரை எழுதப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அழிவடைந்து பல நூற்றாண்டுகள் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
former united nation genaral secaratory kofi annan death today morning

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites