கேரளா வெள்ள பாதிப்பு: தெலங்கானா முதல்வர் ரூ.25 கோடி நிவாரண உதவித் தொகை அறிவிப்பு

0
366
Chief Minister declared maximum amount 25 crore relief

கேரளத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டதையடுத்து, முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகபட்சமாக ரூ.25 கோடி கேரளாவுக்கு நிவாரண உதவித் தொகையாக அறிவித்துள்ளார். Chief Minister declared maximum amount 25 crore relief  

கேரளத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இக்கட்டான சூழல் நிலவுவதாகவும், 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்ட தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் சார்பில் அந்தந்த முதல்வர்கள் நிவாரண உதவித் தொகைகளை அறிவித்துள்ளனர்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகபட்சமாக ரூ.25 கோடி கேரளாவுக்கு நிவாரண உதவித் தொகையாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் ரூ.2.50 கோடி மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதுபோல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் ஆகியோர் கேரளாவுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.10 கோடி வழங்கி அறிவித்துள்ளனர். Chief Minister declared maximum amount 25 crore relief

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites