மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்

0
634
80 people evacuated Maskeliya

மஸ்கெலியா பிரவுன்வீக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவில், மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலமரமொன்று முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், குறித்த குடியிருப்பில் வசித்தும்வரும் 18 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் வெளியேற்றப்பட்டுள்னர். (80 people evacuated Maskeliya danger falling trees)

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அம்பகமுவ பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் மற்றுமொரு மரமொன்று முறிந்து மாட்டுத் தொழுவமொன்றில் விழுந்துள்ளது.

எனினும் மாட்டுத் தொழுவத்தில் இருந்த பசுக்கள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 80 people evacuated Maskeliya danger falling trees