ஆண் உறுப்பை உயர்தர பரீட்சை மாணவிகளுக்கு காண்பித்த பொலிஸ் பரிசோதகர்

0
988
Police Inspector shown Male organ AL examination students

12 அங்குல நீளமான போலியான ஆண் உறுப்பை பாடசாலை மாணவிகளுக்கு காண்பித்த 70 வயதான ஓய்வுபெற்ற உபபொலிஸ் பரிசோதகர் ஒருவரை கேகால்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். (Police Inspector shown Male organ AL examination students)

தனது இடுப்பில் வயரினால் கட்டியிருந்த 12 அங்குலம் நீளமான போலியான ஆண் உறுப்பை உயர் தர பரீட்சையின் பின்னர், வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுக்கு காண்பித்த 70 வயதான நபரை பொது மக்கள் மடக்கி பிடித்து கேகாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் இந்த நபர் மூன்று பிள்ளைகளின் தகப்பனான ஓய்வு பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் என்றும் தெரியவந்துள்ளது.

இவரின் செயலைக் கண்ட மாணவிகள் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வதை கண்ட முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர், பொது மக்களுடன் சேர்ந்து இந்த நபரை மடக்கி பிடித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில் இந்த நபர் கண்டி பெரஹெரவுக்கும் சென்று அங்கும் தனது போலியான ஆண் உறுப்பை மக்களுக்கு காண்பித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மற்றும் மேலுமொரு 14 அங்குலம் நீளமான போலியான ஆண் உறுப்பும் மீன் வெட்டும் கத்தி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து இந்த போலியான ஆண் உறுப்புகளை 20,000 ரூபா விகிதம் கொள்வனவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

தான் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து 2004 ஆம் ஆண்டு உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு கிடைத்ததாகவும் 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கேகாலை நகரத்திற்கு அருகில் இருந்து இவ்வாறு மாணவிகளுக்கு தான் அணிந்திருந்த சாரத்தை உயர்த்தி போலியான ஆண் உறுப்பை மாணவிகளுக்கு காண்பிப்பதில் தான் இன்பம் அடைவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை கேகாலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Police Inspector shown Male organ AL examination students