பெற்றோரால் பட்டினி போடப்பட்ட சிறுவன்: உலகையே உலுக்கியுள்ள படம்

0
609

 

பெற்றோரால் பட்டினி போடப்பட்ட சிறுவனொருவரின் படம் உலகையே உலுக்கியுள்ளது Parents starved Boy Ukraine.

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவனொருவரின் படமே இவ்வாறு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விலடிக் மொல்சென்கோ என்ற குறித்த சிறுவன் அவனது இல்லத்தில் இருந்தே சமூக சேவகர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில், சிறுவனின் பெற்றோர் வீட்டுக்குள் சமூக சேவகர்களை அனுமதிக்கவில்லை.

எனவே நீதிமன்ற உத்தரவுடன், பொலிஸாருடன் சேர்ந்து சமூக சேவகர்கள் வீட்டுக்குள் நுழைந்து சிறுவனை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டபோது சிறுவன் வெறும் 7 கிலோ கிராம் நிறையுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, அங்கிருந்த உணவுத்தட்டைக் கண்ட சிறுவன் மகிழ்ச்சியில் கத்தியதாகவும், அவர் அந்தளவு பசியில் இருந்ததாகவும் சமூக சேவகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சையளித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவரது பெற்றோர், விலடிக் குழந்தையாக இருக்கும் போது உள்ளூர் வைத்தியசாலையில் அவரை வைத்து பரிசோதனை செய்ததாகவும், இதுவே அவரது நிலைக்கு காரணமெனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் பெற்றோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.