நல்லூர் கந்தன் கொடியேற்றத் திருவிழா இன்று ஆரம்பம்

0
756
nallur kandaswamy kovil festival today started

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. (nallur kandaswamy kovil festival today started)

இந்த ஆலயத்தில் தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள மஹோற்சவத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 05 மணியளவில் திருமஞ்சத் திருவிழா இடம்பெறவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 01 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 06 மணியளவில் அருணகிரிநாதர் உற்சவமும், 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 06 மணியளவில் கார்த்திகை உற்சவமும் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணியளவில் சூர்யோற்சவமும், 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணியளவில் சந்தான கோபாலர் உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல் 05 மணியளவில் கைலாசவாகன உற்சவமும் இடம்பெறவுள்ளது.

05 ஆம் திகதி புதன்கிழமை காலை 07 மணியளவில் கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல் 05 மணியளவில் வேல் விமான உற்சவமும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 07 மணியளவில் தண்டாயுதபாணி உற்சவமும் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 05 மணியளவில் ஒருமுகத் திருவிழாவும், 07 ஆம் திகதி பிற்பகல் 05 மணியளவில் சப்பறத் திருவிழாவும், 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை 07 மணியளவில் தேர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

அன்றைய தினம் மாலை கொடியிறக்க வைபவம் இடம்பெறவுள்ளதுடன், வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

நல்லூர்க் கந்தன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமை போன்று யாழ். மாநகர சபை ஏற்பாடு செய்துள்ளதுடன், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; nallur kandaswamy kovil festival today started