போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது

0
685
Man arrested money laundering preparing fake documents

உலக அழகியல் சங்கத்தின் தலைவர் எனத் தோன்றி அழகியல் கலைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த எஸ். காரியவசம் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (Man arrested money laundering preparing fake documents)

ஹிக்கடுவை பிரதேசத்திலுள்ள அவரின் இல்லத்தில் வைத்து பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக அழகியல் சங்கத்தின் தலைவர் எனக் கூறி, அழகியல் கலைஞர்களுக்கு பல்வேறு சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் பல்கலைக்கழக பட்ட சான்றிதழ்களை பெருமளவிலான பணத்திற்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பன்னிப்பிட்டிய, மிரிஹான மற்றும் பல பிரதேசங்களில் தனது அலுவலகங்களை வைத்திருந்து, இந்த மோசடிகளைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் இல்லத்தில் இருந்து அரச முத்திரை பதித்து தயாரிக்கப்பட்ட சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் பட்டப்படிப்பு சின்னங்கள் பலவற்றை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தல் தொடர்பாக இந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags;Man arrested money laundering preparing fake documents