தமிழர்களுக்கு எதற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி? : இனவாதத்தை கக்கும் மஹிந்த அணி

0
495
cb rathnayake

தமிழ் மக்களுக்கு இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவையில்லை, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களே அவர்களின் எதிர்பார்ப்பு என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரான சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.(cb rathnayake,Tamilnews,cb rathnayake,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, )

எதிர்க் கட்சித் தலைவர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இருந்து பிடுங்குவதற்கு மஹிந்த அணி அண்மையில் எடுத்த முயற்சியும் தோல்வியுற்ற நிலையில் இந்தக் கருத்து அவர்கள் தரப்பில் இருந்து வந்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று தமிழில் கருத்துத் தெரிவித்தபோதே ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதில்லை. வீட்டுப்பிரச்சினை, கல்வி, சுகாதாரம், தொழிலின்மை உள்பட இன்னோரன்ன பிரச்சினைகளைத் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றனர். அவை பற்றி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி குரல் கொடுப்பதாக இல்லை.

புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே எதிர்க் கட்சித் தலைவரும் அவரது கட்சியினரும் முனைப்புக் காட்டுகின்றனர். நாட்டிலுள்ள தமிழ் மக்களின் விடயத்தில் கவனம் செலுத்துவதில் பின்நிற்கின்றனர்.

முன்னாள் அரச தலைவர் மஹிந்த போரை நிறைவுசெய்த பின்னர் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அவ்வாறான வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது தடைப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தற்போது எதிர்க்கட்சித் தலைமை தேவையில்லை. அந்த மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்திசெய்யும் வேலைத்திட்டங்களே வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளார். அவர் கொழும்பில் வாழ்கிறார். அவரால் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? – என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:cb rathnayake,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news,