Type to search

எனது தந்தை எங்கிருந்தாவது பார்த்து கொண்டிருப்பார் : தனஞ்சய டி சில்வா உருக்கம் (Video)

Cricket Head Line SPORTS

எனது தந்தை எங்கிருந்தாவது பார்த்து கொண்டிருப்பார் : தனஞ்சய டி சில்வா உருக்கம் (Video)

Share
 • 5
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  5
  Shares

“ஆடுகளத்தில் பெரிதாக மாற்றங்கள் இல்லை, நான் நினைக்கிறேன் ஒருநாள் போட்டிகளில் மிகவும் மந்தமாகவே பந்து வீசப்பட்டது. எனினும் இன்றைய போட்டியில் எமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதுவே எமது வெற்றிக்கு திருப்பு முனையாக இருந்தது. நான் கிரிக்கெட் அணியில் விளையாடுவது எனது தந்தைக்கு மிகவும் சந்தோசம். அனைத்து போட்டிகளையும் பார்ப்பார், எங்கிருந்தாவது தற்போது பார்த்துக் கொண்டிருப்பார் என தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

தென்னாபிரிக்க அணியுடனான ஒரேயொரு இருபது 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட தனஞ்சய டி சில்வா , ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விகளுக்கு விடையளிக்கையில்;

* முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கு பின்னர் வெற்றி பெற்றதன் இரகசியம்…

“இரகசியம் என்று ஒன்றுமில்லை எமது பயிற்சியில் முன்னேற்றம் அது தான் உண்மை, நாம் எதிர்பார்த்திருந்தோம் அவர்களது பந்து வீச்சினை எதிர்கொள்வதற்கு, கடுமையாக பயிற்சி பெற்றோம்….

* இருபதுக்கு – 20 போட்டியில் துடுப்பெடுத்தாடியது..

“நானும் தினேஷ் சந்திமாலும் ஒரே விதமாக துடுப்பெடுத்தாடுபவர்கள், நான் வீசப்படும் பந்துகளுக்கு என்னால் இயன்றளவு பவுண்டரி அடித்தேன், இறுதியில் ஆட்டமிழந்தேன்..

* விளையாட ஆசையாக இருக்கும் சந்தர்ப்பம்..

“இலங்கை அணிக்கு விளையாடுவதென்றால் எந்த போமட்டில் என்றாலும் விளையாடத் தயார், எச்சந்தர்ப்பத்திலும் எங்கேயும் ஆடத் தயார்…

*திடீரென கிடைத்த வாய்ப்பு எனலாம்..

“ஆம். நான் பொதுவாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகளவு விளையாடியது இல்லை..

*தந்தையின் ஞாபகம்…

“அவருக்கு ரொம்பவே சந்தோசம்.. எனது எல்லா போட்டிகளையும் பார்ப்பார், எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டிருப்பார்.…

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

99 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, நீண்டநேர போராட்டத்தின் பின்னர் 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்காவுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக இருந்தது.

முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

க்வின்டன் டி கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.

ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிக்ஸ் கிலாசன், டேவிட் மிலர், ஜூனியர் டாலா ஆகியோரால் மட்டுமே 10 ஓட்டங்களைக் கடக்க முடிந்தது.

தென் ஆபிரிக்க அணி 16.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பந்துவீச்சில் லக்ஸான் சந்தகேன் 3 விக்கெட்களையும் அகில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இலகுவான இலக்கான 99 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி ஆரம்பத்தில் கடும் பின்னடைவுக்குள்ளானது.

முதலிரண்டு விக்கெட்களும் 6 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டிஸ் ஆகியோர் முதல் ஓவரில் ஆட்டமிழந்தனர்.

தனஞ்சய டி சில்வா மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது.

தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ், திசர பெரேரா ஆகியோரால் ஓர் ஓட்டத்தைகூட பெற முடியவில்லை.

தசுன் ஷானக 16 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதிவரை களத்தில் நின்ற டினேஷ் சந்திமால் 36 ஓட்டங்களையும் இசுரு உதான 5 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்த வெற்றிக்கு அமைவாக ஒரு போட்டியைக் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசமானது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை தனஞ்சய டி சில்வா தட்டிக்கொண்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:man of the match dhananjaya de silva emotional,


 • 5
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  5
  Shares