யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் பெரும் நடிகர்கள் : ஆர்னோல்ட்

0
477
immanuel arnold

யாழ்.மாநகர எல்லைக்குள் கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் நிச்சயமாக அகற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.(immanuel arnold,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News,)

யாழ்.பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போதே மாநகர முதல்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“குருநகர் மட்டுமல்லாமல் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள சகல கிராமங்களிலும் சட்டத்திற்கு மாறாக கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அவை தொடர்பாக அந்தந்த கிராமங்களில் வாழும் நகரசபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுவதில்லை.

காரணம் அவர்களுடைய வாக்கு வங்கி பாதிக்கப்படும் என நினைக்கிறார்கள். இந்நிலையில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 23 கட்டடங்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் சட்ட விரோதமாக மக்கள் மட்டும் வீடுகளையும், கடைகளையும் கட்டவில்லை.

யாழ்.மாநகரில் உள்ள பாரிய வர்த்தக நிலைய கட்டிடங்கள் பல சட்டத்திற்கு மாறாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இங்கே யாரும் நடிக்க தேவையில்லை. மேலும் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்கள் நிச்சயமாக அகற்றப்படும்.

அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதற்கு முன்னர் அந்த கட்டடங்களில் உள்ள மக்களுக்கான மாற்று திட்டம் ஒன்றை நாம் உருவாக்கவேண்டியது கட்டாயமாகும். அந்த மாற்று திட்டம் வந்தவுடன் கட்டடங்கள் அகற்றப்படும்.

இந்த கரையோரத்தில் உள்ள கட்டடங்களுக்கு யாழ்.மாநகரசபை சோலைவரியில் கூட சட்டத்திற்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:immanuel arnold,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News,