புதிய சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

0
363
government sector salary cabinet decision

அரச பிரிவின் ஊதிய அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கான புதிய சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.(government sector salary cabinet decision,Tamilnews)

அரச சேவையின் சம்பள அதிகரிப்பு மற்றும் ரயில் சேவை உள்ளிட்ட சில சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் ஆராய இந்த ஆணைக்குழு நியமிக்கப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஆணைக்குழுவிற்கு இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரச பிரிவில் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சுற்றுநிரூபங்களின் விதிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அதன் ஊடாக அரச சேவைக்கு ஏற்படும் அழுத்தங்கள் குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அரச சேவைக்காக புதிய சம்பள முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:government sector salary cabinet decision