புரட்சியில் இறங்கியுள்ள பஞ்சாபியர்கள்: தமிழர் தேசங்களின் விடுதலை பிரகடனம் என்று?

0
476
Punjab Khalistan Protest Tamil News
Punjab Khalistan Protest Tamil News

சீக்கியர்களின் பஞ்சாப் மாநில தனிநாட்டுக் கோரிக்கை பிரகடனம் இன்று! தமிழர் தேசங்களின் விடுதலை பிரகடனம் என்று? Punjab Khalistan Protest Tamil News

2020 இல் தமிழீழ பிரகடனம் முன்வைக்க தமிழினம் காத்திருக்கும் இந்த நேரத்தில் எமக்கு முன்மாதிரியான சீக்கிய மக்களின் இந்த பிரகடனத்தை தமிழ் மக்கள் உற்று நோக்குவோம்! வரலாற்றை படிப்போம்! வரலாற்றை படைப்போம்! ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் ஒன்றில் கூறப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தின் அடிப்படையில் தனிநாட்டுக்கோரிக்கையை சுயநிர்ணய உரிமையை முன்வைத்து கேட்கும் உரிமை எமக்கும் உண்டு.

அந்த அதிகாரத்தில் ஒரு இனம் தனது பொது மற்றும் அரசியல் உரிமைகளை பெறும் தகமையுடையதுடன், அது தனது அனைத்துலக அந்தஸ்த்து, பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார உரிமைகளையும் பாதுகாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. உலகில் உள்ள 150 இற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சீக்கிய இனத்தவர்கள் இன்று ஆகஸ்ட் 12, 2018 பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் தமது தனிநாட்டுக்கோரிக்கைக்கான பிரகடனத்தை அறிவிக்கவுள்ளனர்.. உலகமெங்கும் பரந்து வாழும் 25 மில்லியனுக்கு மேற்பட்ட சீக்கிய சமூகத்தவர்களில் பலர் இந்த நிகழ்வில் பங்கெடுக்கின்றனர். நீதிக்கான சீக்கியர்களின் அமைப்பு என்ற அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர்களான குர்பற்வன்ற் சிங், ஜதீந்தர் சிங் மற்றும் ஜோகா சிங் ஆகியோர் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர். சீக்கிய இனத்தின் மீது இந்திய மத்திய அரசு மிகப்பெரும் வன்முறைகளையும், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகவும், இந்திய மத்திய அரசின் இந்த நடவடிக்கையை முறியடித்து தமது இனத்தை காப்பாற்றுவதற்கு தனிநாட்டுக் கோரிக்கையை தவிர தமக்கு வேறு எந்த வழியும் இல்லை எனவும், இந்திய மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். சீக்கிய இனத்தின் விடுதலைக்காக போராடும் தலைவர்கள் மீது இந்திய அரசு துன்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும், காஷ்மீரிலும் இது தொடர்வதாகவும் சீக்கியர்களின் அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பற்வன்ற் சிங் தெரிவித்துள்ளார். சீக்கிய அமைப்பின் இந்த தனிநாட்டுக்கோரிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு பின்னுள்ள சட்டவியல் தொடர்பான காரணிகளை அவர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசின் இன அடக்குமுறைகளுக்கு உள்ளான சீக்கிய சமூகத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போராட்டத்தின் வெளிப்பாடாகவே இந்த பிரகடனம் அமைந்துள்ளது. இந்தியாவின் இனவாத மற்றும் மதவாத கோரமுகத்தை உலகஅரங்கில் வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதுடன் உலகில் உள்ள மக்கள் அனைவரும் சீக்கிய மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் கொடுமைகளை நேரில் கண்டு, எமது தனிநாட்டுக் கோரிக்கையில் உள்ள நீதியை புரிந்துகொள்ள வேண்டும் என இந்த அமைப்பின் மற்றுமொரு தலைவரான குரு சரன் சிங் தெரிவித்துள்ளார். இந்திய தேசத்தில் உள்ள எல்லா சிறுபான்மை மக்கள் மீதும் இந்திய மத்திய அரசு தனது இனவாத மற்றும் மதவாத அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. இது இந்திய சட்டத்திற்கு புறம்பானது. இந்த மதவாத அடக்குமுறைக்கு இந்திய மத்திய அரசு முழுமையான ஆதரவுகளை வழங்குகின்றது.

படுகொலைகளையும், கடத்தல்களையும் மானபங்கப்படுத்தல்களையும் இந்திய அரசு தனது மதவாத மற்றும் இனவாத குழுக்கன் மற்றும் ஆயுதப்படைகளின் மூலம் மேற்கொள்ளவாத இந்த அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளர். சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பெண்களையும், சிறுவர்களையும் கூட இந்திய மத்திய அரசு படுகொலை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நீர் மற்றும் மின்சார வளங்களை வேறு மாநிலங்களுக்கு திசைதிருப்பி இந்திய மத்திய அரசு தமது வளங்களை சூறையாடி வருவதாக நீதிக்கான சீக்கிய அமைப்பின் மற்றுமொரு தலைவர் ஜோகா சிங் தெரிவித்துள்ளார். இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்பதுடன் எமது மாநிலத்தின் விவசாய மற்றும் பொருளாதார வளங்களை இந்திய மத்திய அரசு திட்டமிட்டு நாசப்படுத்தி வருகின்றது. நாம் எமது மத மற்றும் கலாச்சார சுதந்திரத்தை இழந்து வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். உலகின் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டுமே எமது மத சுதந்திரம் மறுக்கப்படுவதுடன், நாம் சுதந்திரமாக வாழவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அங்கு வாழும் மக்களை தற்கொலைக்கு தூண்டி வருவதாகவும் ஜோக சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக பல இனங்கள் தமது சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன. கஷ்மீர், நாகலாந்து, மனிபூர் உட்பட பல மாநில மக்கள் தமது விடுதலைக்காக போரடி வருகின்றனர் என இந்த அமைப்பின் தலைவர்கள் பிரித்தானியா ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளனர். தமது இந்த போராட்டத்திற்கு பிரித்தானியா அரசும், ஏனைய நாடுகளும் பேராதரவினை வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இந்தியாவின் இந்த இன அடக்குமுறை பல மாநிலங்களுக்கும் பரவி வருவதாகவும், தமிழகத்தில் அது உச்சம் பெற்றுவருவதாகவும் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் அருஷ் தெரிவித்துள்ளார். ஆக தமிழகம் தமிழீழம் அடிமை தளை அறுத்து விடுதலையாகும் உரிமை கொண்ட பண்டை பாரம்பரிய தம்மை தாம் ஆண்ட வரலாறு கொண்ட தேசங்கள் என உணர்ந்து தேசிய விடுதலைக்காக போராடி விடுதலை பெறும் உரிமை உணர்ந்து கடனாற்றுவோம்.

நன்றி: இணையம்