வடக்கின் குற்றங்களுக்கு புதிய முறைப்பாட்டு தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

0
404

வட மாகாண மூத்த பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்தினால் புதிய முறைப்பாட்டு இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. North Police Introdeuce New Complaint Number Tamil News

வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக சிறப்புத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

076 60 93 030 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி, குறித்த குற்றச் செயல்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தொலைபேசி எண்ணுக்கு கிடைக்கும் தகவல்கள், வட மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் மாஅதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் முழுமையான கண்காணிப்பில் விசாரணைகள் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites