நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம் என பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன் – மகிந்த

0
392
wrote Prabhakaran meeting Mahinda tamil news

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். wrote Prabhakaran meeting Mahinda tamil news

சமாதான தீர்வை காண்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதன் காரணமாக பிரபாகரனை கொல்லவேண்டிய நிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ் வெங்கட் நாரயணனிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் தீர்வை காண்பதற்காக நேரடி சந்திப்பொன்றில் ஈடுபடுவோம், நான் கிளிநொச்சி வருகின்றேன் அல்லது நீங்கள் கொழும்பு வரலாம் என தெரிவித்து பிரபாகரனிற்கு கடிதம் எழுதினேன்.

2006 இல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரபாகரனிற்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பினேன்.

சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் அப்பாவி பொது மக்கள் கொல்லபடுவதை தவிர்க்க முடியும். உங்கள் படைகள் எங்கள் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உங்களை கொலை செய்வோம் என எச்சரித்ததாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

அதற்கு பிரபாகரனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை கொலைகள், தற்கொலை தாக்குதல்கள், படையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

tags :- wrote Prabhakaran meeting Mahinda tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites