பசிலும் கோத்தாவும் அமெரிக்காவுக்கு பறந்தனர் : 4 மாதங்களுக்கு இலங்கைக்கு வரமாட்டார்கள்

0
613
gotabaya basil rajapaksa went USA

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நேற்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர். (gotabaya basil rajapaksa went USA, Tamilnews)

இந்நிலையில், அவர்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு திரும்பி வரப்போவதில்லை என கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள கடும் பிரச்சினை காரணமாகவே பசில், நீண்டநாட்களுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க போவதாக கூறப்படுகிறது.

அதேவேளை வியத்கம அமைப்பில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் வெளியிட்ட கடுமையான விமர்சனங்கள் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் அமெரிக்கா சென்றுள்ளதாக பேசப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்துள்ளதால், கடும் அதிருப்தியில் இருந்து வரும் கோத்தபாய, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பாக இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என கோத்தபாய தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags: gotabaya basil rajapaksa went USA,gotabaya basil rajapaksa went USA