தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள்

0
676
Security fences around thiyaga theepam thileepan memorial

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ். மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளது. (Security fences around thiyaga theepam thileepan memorial)

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் யுத்த காலத்தின் போது இராணுவத்தினரால் அழிக்கப்பட்டது.

இவ்வாறு அழிக்கப்பட்ட நினைவிடத்தில் கடந்த காலத்தில் திலீபனின் நினைவு தின வாரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில், திலீபனின் நினைவிடத்தை பாதுகாப்பது இல்லை என்றும் அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டன.

அத்துடன், நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர், ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாகவும் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்பமாக உள்ளது.
இந்தநிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால், நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர் சபை உறுப்பினர் வ. பார்த்திபன் நினைவிடத்தைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததற்கு அமையவே இவ்வாறு வேலி அமைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Security fences around thiyaga theepam thileepan memorial