நாவற்குழியில் 62 குடும்பங்களின் காணி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு

0
714
Land issue 62 families navatkuli jaffna

தென்மராட்சி – நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணி தொடர்பிலான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (Land issue 62 families navatkuli jaffna)

எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற மக்களை அரச காணியில் இருந்து வெளியேற்றுவதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தொடரப்பட்ட வழக்கு இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுமார் 62 குடும்பங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் 34 குடும்பங்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக வீடமைப்பு அமைச்சரோடு பேசி, சுமூகமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு நீண்ட தவணையை வழங்குமாறும் சட்டத்தரணிகளால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Land issue 62 families navatkuli jaffna