தாமரைக்கோபுரம் சீனாவின் நினைவுச்சின்னமாம்!

0
488

2018 மற்றும் 2019 ஆம் கல்வியாண்டுக்குரிய இலங்கை மாணவர்களுக்கான சீன அரசாங்கத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பிலுள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்றது. Sri Lanka Lotus Tower China Memorial Gift Tamil News

இதன் போது நிகழ்வில் உரையாற்றிய உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ தேவசுரேந்திர, சீனா கல்வி சார்ந்த உதவிகள் மாத்திரமன்றி பொருளாதாரம், மருத்துவம், உட்கட்டமைப்பு, வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகளிலும் இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இடம்பெறுகின்ற முக்கிய நாடாக இலங்கை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இறப்பர் – அரிசி உடன்படிக்கையிலிருந்து பரஸ்பரம் இருநாடுகளுக்கிடையில் நல்லுறவு நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், துறைமுக நகரம், அதிவேக நெடுஞ்சாலை என்பன சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டவை என்றும், குறிப்பாக தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற தாமரைக்கோபுரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நினைவுச்சின்னமாக எப்போதும் திகழும் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites