புலம்பெயர் தமிழர்கள் பற்றி அச்சப்பட தேவையில்லை! இராணுவ தளபதி விளக்கம்!

0
586

நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் தவிர புலம் பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் எந்தவகையிலும் அச்சமடையத் தேவையில்லை என்று இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். Sri Lanka Army Commander Mahesh Senanayake Statement Tamil News

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“புலம்பெயர்ந்தோர் என்போர் தமது நாட்டை விட்டு வெளியேறி, இன்னொரு நாட்டில் வாழும் ஒரு குழுவினர்களாவர். இவர்களில் நல்லவர்கள் – தீயவர்கள் இரண்டு தரப்பினர் உள்ளனர்.

நாம், இவர்களின் செயற்பாடுகளில் எதனை எமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள முடியும் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.

கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நேர்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தக் குழுவினர், அங்கு மிகுந்த செல்வந்தர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களிலிருந்து எமக்கு நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாட்டின் முன்னேற்றத்துக்காக இவர்களிடமிருந்து எவ்வாறான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையே நாம் முதலில் அடையாளம் காணவேண்டும்.” என கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites